திமுகவில் விருப்பமனு தாக்கல் நிறைவு..!

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.

திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் சென்னை அறிவாலயத்தில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள் என்பtதால் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று காலை சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்ய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விருப்ப மனுவை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இதுவரை 8,500 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு அதில் 7,000 பேர் பூர்த்திசெய்து அளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.