இடைத்தேர்தல் – நாளை முதல் காங்கிரஸில் விருப்பமனு..!

நாளை முதல் மார்ச் 5 வரை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோர் நாளை முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மார்ச் 5 வரை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. இந்நிலையில், அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.