மோடியின் குடும்பம் என்பது ED, IT, CBI தான் – முதல்வர் ஸ்டாலின்

MK Stalin: மோடியின் குடும்பம் என்பது ED, IT, CBI தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்க நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் குடும்பம் என்பது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

அதில், பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில நாளேடு.  பாஜகவுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

10 ஆண்டு பாஜக ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது. எனவே, மோடியின் குடும்பம் என்பது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ தான் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்