மூன்று நாள் பயணமாக மூன்று மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நாளை ராகுல் காந்தியின் பபுரட்சி பயணத்தை தொடங்கி வைக்க கன்னியாகுமரி பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக, இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி. நாளை (புதன்கிழமை) காலை ஸ்ரீபெரும்புதூர் வரும் ராகுல் காந்தி, அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதன்பின் கன்னியாகுமரி சென்று தனது பாதயாத்திரியை தொடங்குகிறார்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை செல்ல உள்ளார். நாளை மதியம் கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் வருகை தர உள்ளனர். ராகுல்காந்தி நடை பயணத்தை தொடங்கி வைத்து விட்டு, அன்றைய தினமே முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை புறப்பட்டு செல்கிறார். இதன்பின் மதுரை செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி வருகையை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment