ஜி20 மாநாடு.! பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.! டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

ஜி20 மாநாடு குறித்து விவாதிக்க இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா உட்பட 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு தான் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடு தலைமை ஏற்று அந்த வருட ஜி20 மாநாட்டை நடத்தும்.

அந்த வகையில், இந்த வருட ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று வழிநடத்த உள்ளது. இந்த மாநாட்டின் தலைமை பொறுப்பு இம்மாதம் டிசம்பர் 1, 2022 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30, 2023 வரையில் இந்தியா வசம் இருக்கும்.

அதனை ஒட்டி, மாநாடு விவரங்கள் பற்றி விவாதிக்க இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதும் பிரதான கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள டெல்லி புறப்பட்டார். அதே போல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment