சென்னை டெஸ்ட்…இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்கு..!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இங்கிலாந்து அணி 420 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இங்கிலாந்து , இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 578 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 218, சிபிலி 87, பென் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடங்க வீரர்களாக இறங்கிய சுப்மான் கில் 29, ரோகித் 6 ரன்களுடன் வெளியேறினார். பின்னர், இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற சரிவில் இருந்த இந்திய அணியை புஜாரா மற்றும் பண்ட் இருவரின் அதிரடி ஆட்டத்தால் மீட்டு வந்தனர். பிறகு மத்தியில் இறங்கிய  தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசி 85* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.

இறுதியாக இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்தது. இதனால், இங்கிலாந்து அணி 266 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சஸை இன்று தொடங்கியது. ஆட்டம் தொடக்கத்திலே இருந்து தடுமாறி விளையாடி வந்த இங்கிலாந்து அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 178 ரன்கள் எடுத்தனர்.

இந்நிலையில், இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் அஸ்வின் 6, ஷாபாஸ் நதீம் 2, பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

author avatar
murugan