மோப்ப நாயை கௌரவிக்கும் விதமாக சிலை வைத்த உத்தரபிரதேச காவல்துறையினர்!

இதுவரையில் 49 வழக்குகளை தீர்ப்பதற்கு உதவியதாக உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள முசாபர் நகர் காவல் துறையினர் டிங்கி எனும் உயிரிழந்த மோப்ப நாய்க்கு சிலை வைத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள போலீஸ் டாக் ஸ்பாட்டில் உறுப்பினராக பணியாற்றி வந்த ஏ எஸ் பி டிங்கி எனும் ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த நாய் இதுவரையில் முசாபர் நகர் காவல்துறையினருக்கு 49-க்கும் மேற்பட்ட சிக்கலான கிரிமினல் வழக்குகளை தீர்ப்பதற்கு உதவியாக இருந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எதிர்பாராத விதமாக இந்த நாய் உயிரிழந்ததை அடுத்து அந்த காவல்துறையினர் அனைவருமே தங்களுக்கு பேரழப்பு ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். டிங்கி நாய் உயிரிழந்தது தங்களுக்கு பேரிழப்பு எனவும் நான் இருந்த பொழுது எவ்வளவு சிக்கலான வழக்குகளைத் தீர்க்க உதவியது என்பதையும் நினைத்துப் பார்த்த காவல்துறையினர் இந்த நாய்க்கு சிலை ஒன்று அமைக்க முடிவு எடுத்துள்ளனர்.

அதன்படி இந்த நாயை கௌரவிக்கும் விதமாக முசாபர்நகர் காவல்துறையினர் தற்பொழுது சிலை வைத்துள்ளனர். இந்த சிலையை காவல்துறை உயர் அதிகாரிகள் திறந்து வைத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரி அபிஷேக் யாதவ் அவர்கள் தெரிவிக்கையில், முசாபர் நகர் போலீசார் 49 குற்ற சம்பவங்களை தீர்க்க உதவிய டிங்கி எனும் நாய் எங்களை விட்டுப் பிரிந்தது. அதனுடைய படைப்பும் பங்களிப்பும் போற்றப்படும் விதமாகத்தான் இந்த சின்னம் வைக்கப்பட்டுள்ளதாகவும் மோப்ப நாய்களை கையாளும் அதிகாரி சுனில் குமார் மூலம் சிலை திறக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal