சென்னை ஆசிரியர்கள் ஜூன் 20-க்குள் தடுப்பூசி போட வேண்டும் – முதன்மைக் கல்வி அலுவலர் ..!

  • சென்னை மாவட்ட பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 20 குழந்தை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
  • கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் காரணத்தை ஆதாரத்துடன் பெற்று வைத்திருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் மத்திய,மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றனர். இதனால், மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியிலும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தடுப்பூசி போடவேண்டும்.

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் காரணத்தை ஆதாரத்துடன் பெற்று வைத்திருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan