பிளாட்பார டிக்கெட் விலை இருமடங்கு ஏற்றம்.! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு.!

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 1 முதல் ஜனவரி 31, 2023 வரையில் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

சாதாரணமாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. இதனை அடுத்து, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கூட்ட நெரிசலை முக்கிய ரயில் நிலையங்களில் தடுக்க, பிளாட்பார கட்டணத்தை உயர்த்தி இருந்தது.

பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் சீரான நிலைக்கு வந்ததும், மீண்டும் பழைய 10 ரூபாய் ரயில்வே பிளாட்பார கட்டணமே வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

TICKET HIKE IN CHENNAI RAILWAY STATION

10 ரூபாயாக இருந்த இந்த கட்டணம், அடுத்தடுத்து விழா காலக்கட்டம் என்பதால் இரு மடங்கு உயர்த்தப்பட்டு, தற்போது 20 ரூபாயாக மாறியுள்ளது. சென்னை சென்ட்ரல், எக்மோர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு,  அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த பிளாட்பார டிக்கெட் விலை ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 1 முதல் ஜனவரி 31, 2023 வரையில் இருக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment