சென்னையில் புதிய பயோ மைனிங் குப்பை கிடங்கு.! இன்று தீர்மானம் நிறைவேற்றம்.!

சென்னை, கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் குப்பைகளை அப்புறப்படுத்த மறுசீரமபைக்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து அதனை மக்கும் குப்பை, மக்கா குப்பைஎன தரம்பிரிக்க கொடுங்கையூர் குப்பை கிடங்கு மறுசீரமைக்கப்பட உள்ளது.

கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் குப்பைகளை அப்புறப்படுத்த மறுசீரமபைக்கப்பட உள்ளது. இதற்கான தீர்மானம் இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

 பயோ மைனிங் திட்டம் மூலம் குப்பை தரம் பிரிப்பது என்பது, குப்பைக்கிடங்குகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்தெடுப்பார்கள். அதில் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றவும், மக்கா குப்பைகளை மறுசுழற்சிக்குப் பயன்படுத்தவும் முயற்சிகள் செய்யப்படும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment