உலக சினிமா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. சென்னையில் ஆரம்பமாகுது சர்வதேச திரைப்பட விழா..

ஒவ்வொரு வருடமும் சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம்.இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் இணைந்து வழங்கும் இந்த விழாவானது கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இந்த வருடம் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவில், 48 நாடுகளை சேர்ந்த 107 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. விழாவில் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக விருதுகளும் வழங்கப்படவுள்ளது.

இந்த திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகும் திரைப்படங்கள் பிவிஆர் மல்டிபிளக்ஸ், அண்ணா திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. மேலும், இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ் விழாவில் திரையிட தேர்வாகியுள்ள படங்கள், பதிவுக் கட்டணம் மற்ற விவரங்களுக்கான தகவல்கள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment