செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றம்.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் உள்ள 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் கரையை கடந்து வருவதால் பெரும்பாலான வடதமிழக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. அதன் முழு கொள்ளளவான 24 அடியில் , 20 அடியை தூண்டியுள்ளது. 2,695 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

மேலும் மழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 5 கண் மதகில், 3வது ஷட்டர் வளியாக 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், அடையாறு கரையோரம் இருக்கும் 10 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஜூன் , நவம்பர் மாதத்தை தொடர்ந்து இந்த வருடத்தில் 3வது முறையாக செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment