ஆன்லைன் சூதாட்டம்; ஆளுநர் செய்வது நியாயமல்ல, இதுவரை 35 பேர் உயிரிழப்பு – அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி 53 நாள் கடந்து விட்டது.

மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களுக்கு நவம்பர் 25-ஆம் தேதியே தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருந்தது. ஆன்லைன் சூதாட்டம் என்ற வலையில் சிக்கி இதுவரை 35 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்றும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளில் இருந்து தமிழக மக்களை காக்கும் வகையில் தடை சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment