தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!

வடகிழக்கு பருவநிலை மீண்டும் தீவிரமடைய உள்ளதால் தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில்,  ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை உட்பட 18  மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று விசை மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி கடல் பகுதியில் 60  கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ராமேஸ்வரம் மீனவர்கள் மறு உத்தரவு  வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசப்படும் என்பதால் இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் நாட்டு மற்றும் விசைப்படை மீனவர்கள் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan