‘கலைஞர் 100’ நிகழ்ச்சிக்கு விஜய் – அஜித்துக்கு நேரில் அழைப்பு விடுப்பு.?

சென்னை, சேப்பாக்கத்தில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டு விழாவை திரைத்துறை சார்பில் பிரமாண்டமாக நடந்துகிறார்கள். அந்த விழாவில் கலந்துகொள்ள இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் மற்றும் கமல் என தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவை கலந்து கொள்ளவதாக கூறப்படுகிறது.

அதன்படி, இந்த விழாவானது டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த இருந்தது. இந்த விழா தற்பொழுது, மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரணப் பணிகள் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி,  (24.12.2023) அன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா (06.01.2024) சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் “கலைஞர் 100” நிகழ்ச்சிக்கு விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அஜர்பைஜானில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் அஜித்துக்கும் அழைப்பு விட்டுடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரையுலகமே பங்கேற்கும் ‘கலைஞர் 100’ விழா….அதிர போகும் சென்னை!

முன்னதாக, இந்திய சினிமாவை பங்கு பெரும் வகையில், நடிகர்கள் அமிதாப் பச்சன், மோகன் லால், சிவராஜ் குமார், சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, 24 சங்கங்கள் சார்பில் இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறுவது பலரது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த விழாவுக்கு நடிகர் விஜய் மற்றும் அஜித் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.