Budget 2024 : வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.! – நிர்மலா சீதாராமன்.!

மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குறுகிய கால பட்ஜெட்டாக  இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.! நிர்மலா சீதாராமன்.!

500 பில்லியன் :

குறுகிய கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று அறிகுறி அளித்து தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையை தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளில் 500 பில்லியன் அளவுக்கு  அந்நிய செலவாணி நமது நாட்டில் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு :

நமது நாட்டின் உட்கட்டமைப்பு செலவு 11.11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் செலவீனம் ஆண்டுக்கு 40.90 லட்சமாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கையானது 2.4 மடங்கு அதிகரித்துள்ளது. வருமான வரி ரிட்டர்ன்ஸ் 10 நாட்களில் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.

மாற்றமில்லை :

வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய வரிவிகித நிலைமையே தற்போதும் தொடர்கிறது. கார்ப்பரேட் வரி 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை 4.5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment