#BREAKING : ‘இது சரியல்ல’ – இலங்கையில் பதற்றத்தை தணிக்க ஐ.நா அறிவுரை..!

இலங்கையில் பதற்றத்தை தணிக்க சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும் என ஐ.நா அறிவுரை வழங்கியுள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வண்ணம் அவசர நிலை பிரகடனம், இணையசேவை முடக்கம் போன்ற செயல்களில் ஈடுபட்டது.

இந்த நிலையில், இலங்கையில் பதற்றத்தை தணிக்க சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும் என ஐ.நா அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது அத்துமீறி நடந்துகொள்வது சரியல்ல என்றும், எதிர்க்கட்சிகள் பல்வேறு சமூக அமைப்புகளுடன் அரசு ஆலோசனை நடத்தி ஆமையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் ஐ.நா அறிவுறுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.