#BREAKING: ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜஸ்தானுக்கு மாற்றப்படுகிறார்!

தெலுங்கானா மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை.

சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி முரளிதரனை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியே நியமிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்று, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரை நியமிக்க கொலிஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஷேக் ரெட்டி மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிகில் காரியெல் பாட்னா சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment