BREAKING NEWS:ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்புக்கு பழிக்கு பழி வாங்க திட்டம்!புலனாய்வு துறை எச்சரிக்கை

தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் உயிரிழப்புக்கு பழிக்கு பழி வாங்க திட்டம்” என்று  தமிழக குற்ற புலனாய்வு துறையின் அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மாவட்ட  ஆட்சியர் அலுவலகம்,எஸ்.பி அலுவலகங்கள் மற்றும் போலீசார் தங்கியுள்ள இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம் என தகவல் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு 74 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment