#BREAKING: சென்னையில் குரங்கு அம்மை பரிசோதனை மையம்.. அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை – அமைச்சர்

வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் குரங்கு அம்மை பரிசோதனை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

சென்னை கிண்டியில் உள்ள குரங்கு அம்மை பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை கண்டறியப்படவில்லை. தமிழகம் வந்த சிலருக்கு குரங்கு அம்மை இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டன. புனேவுக்கு மாதிரிகளை பரிசோதித்ததில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் குரங்கு அம்மை பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மையை கண்டறிவதற்கான ஆய்வகத்தை சென்னையில் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. கிண்டி கிங் மருத்துவமனையில் குரங்கு அம்மை நோயை பரிசோதனை செய்யலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குரங்காமை பரிசோதனை எடுத்து, அந்த மாதிரிகளை புனேவிற்கு அனுப்பி வைக்க தேவையில்லை கிங்ஸ் மருத்துவமனையில் இருக்கக்கூடிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

குரங்கு அம்மை பாதிப்பு நாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறி உள்ளதா என தீவிரமாக பரிசோதிக்கப்டுகிறது. வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் குரங்கு அம்மைக்கான பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம். தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடத்தப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளிலிருந்து வரும் வீரர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை வந்த எந்த செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்படவில்லை என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment