#Breaking:சுகாதாரத் திட்டம்:தமிழகத்துக்கு ரூ.805 கோடி நிதி ஒதுக்கீடு – நிதி அமைச்சகம்!

தமிழகம்:உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார திட்டங்களுக்காக மத்திய நிதி அமைச்சகமானது, தமிழகத்துக்கு ரூ.805 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பதினைந்தாவது நிதிக் குழு (FC-XV) 2021-22 முதல் 2025-26 வரையிலான தனது அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.4,27,911 கோடி மானியம் வழங்கப் பரிந்துரைத்துள்ளது. ஆணையம் பரிந்துரைத்த மானியங்களில் ரூ.70,051 கோடி சுகாதார மானியங்களும் அடங்கும். இந்த தொகையில் ரூ.43,928 கோடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ரூ.26,123 கோடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,19 மாநிலங்களின் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுகாதாரத் துறை மானியமாக ரூ.8,453.92 கோடியை நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்டுள்ளது. பதினைந்தாவது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த மானியங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில்,தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார திட்டங்களுக்காக ரூ.805.92 கோடி கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.