#LIVE: 5 மாநிலங்களின் முன்னிலை நிலவரம் நேரலை இதோ;3 மணி நிலவரப்படி மீண்டும் பினராயி

3:25-மீண்டும் பினராயி |கேரளாவில் உள்ள 140 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் மதியம் 3 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 93 இடங்களில் முன்னனியில் உள்ளது.

2:18-ட்விட்டரில் ஸ்டாலின்|வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

1:52-வாழ்த்துக்கள் மம்தா|ஷரத் பவார் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் அழைத்து இது ஒரு “மகத்தான வெற்றி” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1:43-புதுச்சேரியில் பாஜகவின் ஏ நமசிவயம் வெற்றி பெற்றுள்ளார். உப்பலத்தில் திமுக வேட்பாளர் அனிபால் வெற்றி.

1:33:எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுங்கள்|தேர்தல் வெற்றியை கொண்டாடினால் உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையிடவும் தேர்தல் ஆணையம் அனைத்து 5 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

1:18-கமல்ஹாசன் முன்னிலை |கோயம்புத்தூர் தெற்கு சட்டசபை தொகுதியில் எம்.என்.எம் வேட்பாளர் கமல்ஹாசன் 2715 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்

1:03-வெற்றி பாதையில் இடதுசாரி| கேரளாவில் ‘மாஸ்’ காட்டும் பினராயி விஜயன் பெரும்பாலான இடங்களில் இடதுசாரி முன்னிலை இடதுசாரி கூட்டணி: 93,காங்கிரஸ் கூட்டணி:44 பாஜக: 03,மற்றவை: 0

12:41-மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திரிணாமூல் காங்கிரஸ்? நந்திகிராம் தொகுதியில் மம்தா முன்னிலை!!

12:02 PM:என்.ஆர் காங்கிரஸ் முன்னிலை |புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் ஆறு இடங்களில் முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில்  பாஜக மூன்றில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் திமுக ஆகியோர் தலா ஒரு இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

11:53 AM :பாஜக ஆட்சியமைக்கும் |வருகின்ற முடிவுகளின் படி, அசாமில் பாஜக அரசாங்கத்தை அமைக்கும் என்பது தெளிவாகிறது- முதல்வர் சர்பானந்தா சோனோவாலில்.

11:45:கென்னடி வெற்றி|புதுச்சேரியில் திமுகவின் முதல் வெற்றி, உப்பளம் தொகுதியில் போட்டியிட்ட அனிபால் கென்னடி வெற்றி

11:40:சைலஜா டீச்சர்|மட்டனுர் தொகுதியில் சி.பி.ஐ.எம் கட்சி வேட்பாளர் கே.கே.சைலஜா டீச்சர் முன்னிலை

10:55 :விஜய் வசந்த்|கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 12,636 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

10:40 :திரிணாமூல் முன்னிலை|மேற்கு வங்கம் 292 தொகுதியில் 172 தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.பாஜக 114 தொகுதியில் முன்னிலை காங்கிரஸ், சிபிஎம் கூட்டணி 2 இடங்களிலும் மற்றவைகள் 3  முன்னிலையில் உள்ளது.

10:19 :பாஜக முன்னிலை|அசாமில் ஆளும் கட்சியான பாஜக தான் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 126 தொகுதிகளில் பாஜக 83 தொகுதிகளில் முன்னிலை வகித்து உள்ளது.

காங்கிரஸ் அணி 42 இடங்களிலும், அசாம் ஜாதியா பரிஷத் கட்சி 0, மற்ற காட்சிகள் 1 இடங்களிலும் முன்னணி வகித்து வருகிறது. 64 தொகுதிகள் பெரும்பான்மை பெரும் காட்சி தான் வெற்றி வாகை சூடும்

தமிழகம் கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் தலா ஒரே கட்டமாகவும் வாக்குபதிவு நடைபெற்றது.

இந்நிலையில், இன்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் மின்னணு வாக்குகள் எண்ணப்படவுள்ளது.

author avatar
Rebekal