“கம்யூனிச சித்தாந்தம் இந்த நாட்டிற்கு அவசியம்”…”கபாலி” பட இயக்குநர் பா.ரஞ்சித்!

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையில் மதுரையில் நடைபெறுகிறது.மேலும் அதன் ஒரு முன்னேற்பாட்டு நிகழ்ச்சிதான் “ஜாதி ஒழிப்பு சமத்துவ கலைவிழா” மாநாட்டின் வரவேற்ப்புக்குழு தலைவரான கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித் தனது உரையில் குறிப்பிட்டவை:
“கம்யூனிச சித்தாந்தம் இந்த நாட்டிற்கு அவசியம்”…
ஏனெனில் அவர்களால்தான் சமத்துவமான ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும்….மேலும் கம்யூனிச சித்தாந்ததோடு அம்பேத்கரியமும் ஒன்றிணைந்தால் இங்கு ஜாதி கட்டமைப்பை அடித்து நொறுக்க முடியும்….ஏனெனில் அவர்களது உறவுமுறை வார்த்தையான “தோழர்” என்ற வார்த்தையே அதற்கு ஒரு சான்று….ஜாதி ஒழியாமல் இங்கு தமிழராய் இணைவது சாத்தியமற்றது…ஆகவே இங்கு கம்யூனிசமும்,அம்பேத்கரியமும் ஒன்றிணைவதன் அவசியம் தேவைப்படுகிறது….என இயக்குநர் ரஞ்சித் பேசினார்.

கலையின் மூலம் சமகால அரசியலை நகைப்புடன் கூடிய நையாண்டியுடன் கொண்டு சென்றனர் ‘புதுகை பூபாளம்’ குழுவை சேர்ந்த பிரகதீஸ், செந்தில்,மேலும் தற்கால அரசியல் குறித்து மாநில பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் உட்பட பலர் பேசினர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment