ஸ்டாலினுடன் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, தனது  2 – வது மகள் சிந்துஜாவின் திருமண அழைப்பிதழை, மு.க. ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார். மேலும், நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வருமாறு, கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது, திமுகவின் முன்னணி நிர்வாகிகளும் உடன் இருந்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.