சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியீடு?

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாக வாய்ப்பு.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கி, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 10ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள், திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி தனி, கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் தனி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

இதனிடையே, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக பாஜக மாநில தலைவர் எல் முருகன் டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்