8 உயிர்கள் பலியானதுக்கு திமுக அரசே காரணம்.! அண்ணாமலை சரமாரி குற்றசாட்டு.!

அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளதற்க்கு திமுக அரசு தான் காரணம். – அண்ணாமலை குற்றசாட்டு. 

ஆளும் திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசர சட்டம் இயற்றி இருந்தது. அதற்கு ஆளுநர் ரவி கையெழுத்திட்டார். அதற்கான அரசாணையை தமிழக பிறப்பிக்கவில்லை . அதர்க்கடுத்ததாக, சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டமாக இயற்றியது. இதற்கு இன்னும் ஆளுநர் ரவி கையெழுத்திடவில்லை.

இந்த சட்டம் குறித்து ஆளுநர் ரவி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு இருந்தார்.  அதற்கான விளக்கத்தை சட்ட அமைச்சர் ரகுபதி அளித்துள்ளார். இன்னும் அந்த சட்டத்திற்கு ஆளுநர் ரவி கையெழுத்திடவில்லை. இதற்குள் ஆளுநர் ரவி அவசர சட்டத்திற்கு கையெடுத்திட்டும் தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை அதனால் தான் 8 உயிர்கள் பலியாகியுள்ளன என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என்று திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று கூறியுள்ளார். ‘ என்றும்,

‘ அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய தேதிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தேதிக்கும் இடையே 12 நாட்கள் இடைவெளி இருந்தது. அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காத காரணத்தால் தான் அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளது. இந்த உயிரிழப்புக்கு திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரும் தமிழக முதல்வரும் தான் பொறுப்பு.’ என தனது குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment