இபிஎஸ் விவகாரம்; ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு – அறப்போர் இயக்கம்

பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற கூடாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அறப்போர் இயக்கம் தகவல்.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னை பற்றி பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து நேற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அறப்போர் செயல் அவப்பெயர் ஏற்படுத்தியதுடன் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக இபிஎஸ் கூறியிருந்தார். மேலும், டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரியிருந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நெடுஞ்சாலை டெண்டர் வழக்கு தொடர்பாக பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற கூடாது என்ற உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.  ஐகோர்ட்டின் தீர்ப்பு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட சட்ட நிலைப்பாட்டிற்கு புறம்பானதாக உள்ளதாக அறப்போர் இயக்கம் கருத்து கூறியுள்ளது. இதனால் பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற கூடாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment