பாஜக கூட்டணி தர்மம்.. சில செயல்களை பொறுத்துக்கொண்டோம்- இபிஎஸ் .!

இன்று சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

அப்போது, “அதிமுக பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு நன்றி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளது. போராடக்கூடிய விவசாயிகள் மீது கூட குண்டர் சட்டம் பதிவு செய்யப்படுகிறது. திமுக அரசுக்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டது. எப்போது அதிமுக ஆட்சிக்கு வரும் என மக்கள் கேட்கின்றனர். மதுரை மாநகரமே குலுங்கும் அளவுக்கு அதிமுக மாநாடு நடைபெற்றது. மதுரையை அதிர வைத்த அதிமுக மாநாடு. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 15 லட்சம் பேர்கலந்துக்கொண்ட மதுரை மாநாட்டை அதிமுக நடத்தியது. எதிரிகள் அஞ்சும் அளவுக்கு மதுரை மாநாட்டை நடத்திய அதிமுக என தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் வர்தா உள்ளிட்ட பல புயல்கள் வந்த போதும் தமிழ்நாடு அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்கியது இல்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை கடந்த செப்டம்பர் மாதமே தெரியப்படுத்திவிட்டோம். கூட்டணி தர்மத்துக்காக மக்கள் விரோத செயல்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது என கூறினார்.

அதிமுக ஜெட் வேகத்தில் செல்லும்… எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. – இபிஎஸ்.!

பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியதும் அரங்கில் இருந்த தொண்டர்கள் ஆடிப்பாடி உற்சாகமடைந்தனர். மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் மத்திய அரசுகள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது. மாநிலத்தை யார் ஆட்சி செய்தாலும் மத்திய அரசுகள் எப்போதும் தேவையான நிதியை வழங்கியதே கிடையாது எனவும் குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு மனிதாபிமானத்தோடு வழங்க வேண்டும்.

மக்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அடுத்து என்ன தேர்தல் வந்தாலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும். காத்து காழ்புணர்ச்சியால் அம்மா உணவகங்களை திமுக அரசு மூடி வருகிறது” என கூறினார். 

 

author avatar
murugan