ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது-துணை சபாநாயகர் கோரிக்கை.!

  • தமிழக சட்டப்பேரவை 2-ம் நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • துணை சபாநாயகர் ஜெயராமன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை 2-ம் நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் தனபால் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நல்லப்பன், வடிவேலு, கே.கே.சின்னப்பன், சு.சுப்பிரமணியன், கே.வி.முரளிதரன், அழகராஜன், நாராயணன், வ.மு.சுப்பிரமணியன், வை.பாலசுந்தரம், டாக்டர் தேவராஜன், சக்திவேல் முருகன், ஜெனிபர் சந்திரன், எஸ்.ஏ.எம்.உசைன், ஆகியோர் மறைந்த செய்தியை பேரவையில் அறிவித்தார்.

நாடே பற்றி எரிகிறது! அது தொடர்பாக பேரவையில் விவாதிக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு!

பின்னர் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சட்டசபை உறுப்பினர்கள்  சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதைதொடர்ந்து முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கூட்டத்தொடரில் திமுக எம்எல்ஏ பங்கேற்க தடை

இந்நிலையில் இன்று பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளார்.

author avatar
murugan