சிறைக்கு செல்ல தயாராக இருங்கள்.. ஆம் ஆத்மி கட்சியினரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு.!

ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் , தனது கட்சி தொண்டர்களுடன் அண்மையில் உரையாற்றினார். அப்போது மக்கள் நலனுக்காக நாங்கள் தேர்ந்தெடுக்க பாதையில் பயணித்து வருகிறோம் . அதன் காரணமாக கட்சியில் இருக்கும் தொண்டர்கள் சிறைக்கு செல்லவும் தயராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு பேசினார் .

மேலும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அரசியல் தலைவர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என நீங்கள் பேசினால், நீங்கள் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறினார்.

ராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல..! ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பேட்டி.!

மேலும், “நாங்கள் ஒரு போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன், அதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை.  இன்று சிறையில் இருக்கும் நமது தலைவர்கள் எங்கள் ஹீரோக்கள். அவர்கள் அனைவரையும் நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்” என்று கெஜ்ரிவால் கூறினார்.

கைது செய்யப்பட்டு சிறையிலி இருக்கும் தலைவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். சிறையில் இருந்தபோதும், எங்கள் தலைவர்களின் உற்சாகமும் இன்னும் அதிகமாக இருப்பது எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. ஆம் ஆத்மி கட்சியினர் வேறு எந்தக் கட்சிகளும் கவனம் செலுத்தாத சில விஷயங்களில் கவனம் செலுத்தியதால் சில ஆண்டுகளிலேயே அரசியலில் வளர்ச்சி அடைந்துவிட்டோம்.

கல்வி, சுகாதாரம், மின்சாரம், பணவீக்கம், வேலை வாய்ப்பு என்று எந்தக் கட்சியும் பேசாத பிரச்சனைகள் பற்றி பேச ஆரம்பித்தோம். நாட்டிலேயே முதன்முறையாக பிரதான கட்சிகளுக்கு மாற்றாக மக்களுக்கு உண்மையான மாற்று கட்சியாக ஆம் ஆத்மி கிடைத்துள்ளது, அரசியலை மக்கள் விரும்பத் தொடங்கினர் நாங்கள் தேர்தலில் வெற்றிபெறவில்லை, நல்லது எதுவும் செய்யவில்லை என்றால், எங்கள் கட்சித் தலைவர்கள் யாரும் சிறைக்குச் சென்றிருக்க மாட்டார்கள், இன்று அனைவரும் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்

கடந்த டிசம்பர் 22 அன்று டெல்லி கலால் கொள்கை, பணமோசடி வழக்கு தொடர்பாக ஜனவரி 3ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு முன்னர் அனுப்பிய இரண்டு சம்மன்களிலும் அவர் நேரடியாக ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.