தங்களுக்கு வழங்கிய வெகுமதியை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்த -கிராம மக்கள் ..!

கடந்த மாதம் 17மற்றும் 18-ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக தூத்தூக்குடி , நெல்லை தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. தற்போது தான் தூத்தூக்குடி , நெல்லை மாவட்டங்கள் பழைய நிலைமைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவைகுண்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் போது சென்னை- திருச்செந்தூர் ரயில் சிக்கிக்கொண்டது. அந்த ரயிலில் பயணித்த பயணிகள் சிலர் தண்டவாளத்தின் வழியாக தாதன்குளம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு உணவு கொடுத்து உதவி வழங்கிய கிராம மக்கள் அவர்களை செய்துங்கநல்லூர் கிராமத்திற்கு பத்திரமாக வழி அனுப்பி வைத்தனர்.

ரயிலில் பயணித்து வந்தவர்களுக்கு உணவு கொடுத்து பத்திரமாக வழிஅனுப்பி வைத்த கிராம மக்களுக்கு ரயில்வே நிர்வாகம் ரூ.15,000 தொகையை வெகுமதியாக அளித்தனர். அந்த தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாதன்குளம் கிராம மக்கள் கொடுத்தனர். அதன்படி, தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் ரூ.15,000 தொகையை தாதன்குளம் கிராம மக்கள் வழங்கினர். அப்போது தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் பாலக்காடு ரயிலை தாதன்குளத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

author avatar
murugan