ஐபிஎல் 2024 : ஐபிஎல் போட்டிகளை மாற்றிய பிசிசிஐ ..! இதுதான் காரணமா ?

ஐபிஎல் 2024 : நடப்பு ஐபிஎல் தொடரின் நடைபெற போகும் இரண்டு போட்டிகளை தற்போது பிசிசிஐ மாற்றி அமைத்துள்ளது.

ஐபிஎல் 2024 தொடர்ந்து கடந்த மார்ச் -22 ம் தேதி தொடங்கி தற்போது வரை எந்த ஒரு தடைகளும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. ஆனால், முன்தினம் பிசிசிஐ சுற்று வட்டாரத்திலுருந்து ஒரு செய்தி கசிந்தது அது என்னவென்றால் வருகிற ஏப்ரல்- 17 ம் தேதி நடைபெற இருக்கும் கொல்கத்தா – ராஜஸ்தான் இடையேயான போட்டி ராமரின் பிறந்தநாள் அன்று வருவதால் அதை ஒத்தி வைக்க வேண்டும் என்று கொல்கத்தா போலீசார் பிசிசிஐயிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதனை தொடர்ந்து பிசிசிஐ, ஏப்ரல்-16 மற்றும் ஏப்ரல் -17 ம் தேதி நடைபெற போகும் இரண்டு போட்டிகளை தற்போது பிசிசிஐ மாற்றியமைத்துள்ளது. ஏப்ரல்- 16 ம் தேதி நடைபெற இருந்த போட்டியான குஜராத் மற்றும் டெல்லி அணிகளிடையே ஆன போட்டியானது தற்போது ஏப்ரல் -17 ம் தேதிக்கும். ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற இருந்த போட்டியான கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளிடேயே ஆன போட்டி தற்போது ஏப்ரல் 16 -ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஏப்ரல்- 17 ம் நடைபெற இருந்த போட்டியான கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன போட்டியானது சில சர்ச்சைக்கு உள்ளது. வருகிற ஏப்ரல் – 17ம் தேதி அன்று ‘ராமநவமி’ (ராமரின் பிறந்த நாள்) என்னும் திருவிழா வருவதால் நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்கள் அதனை கொண்டாடுவார்கள்.

மேலும், இந்த திருவிழாவை கொல்கத்தா மக்கள் இரவு நேரங்களில் கொண்டாடுவதால் அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தை சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடும் காரணத்தால் , கொல்கத்தா போலீசார் பிசிசிஐயிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். அதற்கு தீர்வாக தற்போது இந்த இரு போட்டிகளையும் மாற்றி பிசிசிஐ அமைத்துள்ளது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.