அயோத்தி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…!!

அயோத்தி நிலம் யாருக்கு என்ற மேல்முறையீடு வழக்கு விசாரணை நாளை நடைபெற இருந்த சூழலில் அது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்நிலையில்  2 . 7  ஏக்கர் நிலத்தை யாருக்கு தொந்தம் என  பிரச்சினை இருந்து வருகின்றது. ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகியோருக்கு  சமமாக பிரித்துக்க  அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கு வருகின்ற 29ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை மறுநாள் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் தள்ளி வைத்துள்ளது நீதிமன்றம் இது குறித்து உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள நோட்டீஸில் அயோத்தி நிலம் யாருக்கு என்ற மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு_வில் நாளை நடைபெறும் அமர்வில் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பங்கேற்காத சூழலில் இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறாது தெரிவிக்கப்பட்டு இருந்தது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment