சோகம்…! திருவண்ணாமலை அருகே பிளஸ்டூ மாணவன் தற்கொலை.!

12thResults

தோல்வி பயத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. இந்த பொதுத்தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகள் 96.38% பேரும், மாணவர்கள் 91.45% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தோல்வி பயத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளது … Read more

Today’s Live: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் கேரளா முதல்வர்.!

LIVE NEWS

நிவாரணம் அறிவிப்பு: கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் பலியான சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரளா முதல்வர் அறிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர் படகு விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரின் செலவையும் அரசே ஏற்கும் என முதல்வர் பினராயி விஜயம் அறிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வாழ்த்து: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக … Read more

வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.!

depression in tamil nadu

வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.  தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் … Read more

பேருந்துக்காக காத்திருந்த மக்கள் மீது கார் மோதி 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!

Accident

அமெரிக்காவில் பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மக்கள் மீது கார் மோதி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்கா: டெக்சாஸின் எல்லை நகரமான பிரவுன்ஸ்வில்லில் புலம்பெயர்ந்தோர் தங்குமிடத்திற்கு வெளியே, நேற்று பேருந்துக்காக காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது ஒரு SUV கார் நிலைதடுமாறி வந்து மோதியதில் 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருந்த காரை விபத்துக்குள்ளாக்கிய டிரைவரைபோலீசார் கைது … Read more

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

heavy rain

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. வரும் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அதன் பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது, இந்நிலையில், இன்று தமிழகத்தின் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, கோவை, நீலகிரி, ஈரோடு,சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், டெல்டா … Read more

ஆல் இந்தியா ரேடியோ இனி ஆகாஷ்வாணி.! கடும் எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.பாலு கடிதம்…

TRBaalu

அகில இந்திய வானொலியை “ஆகாஷ்வாணி” என்று இந்தியில் மட்டும் பயன்படுத்தும் உத்தரவுக்கு திமுக கடும் எதிர்ப்பு. அகில இந்திய வானொலி (All India Radio) என்பதற்கு பதிலாக ‘ஆகாஷ்வாணி’ என இந்தியில் பயன்படுத்த தொடங்கியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூருக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்,  ஆல் இந்தியா ரேடியோ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக ஆகாஷ்வானி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது நியாயமற்றது. … Read more

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு.! முன்னதாகவே வந்த மாணவர்கள்…

NEETUG2023

தேர்வு இன்னும் தொடங்கவுள்ள நிலையில், கடைசி நிமிட பதற்றத்தை தவிர்க்க முன்னதாகவே தேர்வு மையங்களுக்கு சென்ற மாணவர்கள். தேசிய தேர்வு முகமையானது (NTA), மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 499 நகரங்களில் நடக்கவிருக்கும் இத்தேர்வு, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடையும். … Read more

வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து இந்த ஆட்சி -முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

MK Stalin

சென்னை: மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த 2 ஆண்டு நிறைவடைந்து, இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு நினைவிடங்களில் CM மரியாதை செலுத்தியபோது, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த ஆட்சி … Read more

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.!

Department of School Education

2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையால் உத்தவிடப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த கலந்தாய்வு நிறுத்தப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.!

Weather Update

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. வரும் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அதன் பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது, இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை: … Read more