Today’s Live: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் கேரளா முதல்வர்.!

நிவாரணம் அறிவிப்பு:

கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் பலியான சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரளா முதல்வர் அறிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர் படகு விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரின் செலவையும் அரசே ஏற்கும் என முதல்வர் பினராயி விஜயம் அறிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து:

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான், நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


துணைத்தேர்வு:

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு, வரும் ஜூன் 19ஆம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 மாணவர்கள் இந்த தேர்வுக்காக விண்ணப்பித்து அதில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

08.05.2023 12:15 PM

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.