சனிக்கிரகத்தில் ஆராய்ச்சி…பாம்பு ரோபோவை உருவாக்கும் நாசாவின் புதிய முயற்சி…

சனிக்கிரகத்தின் நிலவில் உயிர்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, பாம்பு போன்ற ரோபோவை நாசா உருவாக்குகிறது.

தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA), நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது ஆராய்ச்சியின் அடுத்த படியாக பூமிக்கு வெளியே உள்ள கிரகங்களில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகிறது. இதன் முயற்சியாக சனிக்கிரகத்தின் நிலவில் உயிர்கள் இருப்பதைக் கண்டறிய பாம்பு போன்ற ரோபோவை நாசா ஆராய்ச்சி மையம் உருவாக்குகிறது.

குறிப்பாக சனியின் 83 நிலவுகளில் ஒன்றான என்செலடஸின் மேற்பரப்பை அடைந்து அதன் பனிக்கட்டி அம்சங்களை ஆராயும் வகையில் இந்த பாம்பு ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது என நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

சனியின் 6-வது மிகப்பெரிய நிலவில் உயிர் வாழ்வதற்கு ஏற்ற நீர், நிலம், மற்றும் ஆதாரம் உள்ளதா என்பதைக் கண்டறிய இந்த EELS-Exobiology Extant Life Surveyor எனும் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் கூற்றுப்படி, “ஈஈஎல்எஸ்(EELS) அமைப்பு என்பது நிலப்பரப்பின் உள் கட்டமைப்புகளை ஆராய்வதற்கும், வாழ்விடத்தை மதிப்பிடுவதற்கும், வாழ்வதற்கான ஆதாரங்களைத் தேடுவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு மொபைல் கருவி தளமாகும்.

இது கடல்-உலகத்தால் ஈர்க்கப்பட்ட நிலப்பரப்பு, திரவமயமாக்கப்பட்ட ஊடகம், மூடிய தளம் கொண்ட சூழல்கள் மற்றும் திரவங்களை கடந்து செல்லும் வகையில் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தது.

author avatar
Muthu Kumar