இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய் பற்றியும் பேசியுள்ளார். மேடையில் பேசிய அவர் ” என் மகன் விஜய்யை ஹீரோவாக அறிமுகப்படுத்த பல இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டேன், யாரும்
முன்வரவில்லை.

முதலில் இயக்குனர் பாரதிராஜாவிடம் என்னுடைய மகனின் ஆல்பத்தை காண்பித்தேன். ஆனால், பாரதிராஜாவோ என்கிட்ட ஏன் கொண்டு வந்த.. நீ இயக்குனர் தானே நீயே வைத்து படம் எடுக்கலாமே என்று கூறினார். அவர் முடியாது என்று சொல்வதற்கு தான் அப்படி சொன்னார் என்று நினைக்கிறன்.

ஆனால், தொடக்கத்தில் நல்ல இயக்குநர்கள் முன்வராதது நல்லதுக்கு தான்
போல, ஏனென்றால் விஜய் நான் இயக்கிய படங்களில் நடித்த பிறகு தான் கமர்ஷியல் ஹீரோவாக மாறியுள்ளார். அதனால், தான் கடவுள் அப்படி செய்து இருக்கலாம்” என கூறியுள்ளார்.