நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது.

வரும் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அதன் பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது, இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை:

இன்று முதல் அடுத்த 5 நாட்கள் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை, அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.