திமுக, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் வளர்ச்சியடையாது- தமிழிசை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  திமுக, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் வளர்ச்சியடையாது. தமிழகத்திற்கு கிடைக்கும் வளர்ச்சித்திட்டங்கள் அனைத்தையும் இக்கட்சிகள் தடுக்கின்றன.

திமுகவிற்கு இப்பொழுதே வேலூர் தேர்தல் குறித்த பயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் செய்த பணப்பட்டுவாடாவால் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்தானது தலைகுனிவை ஏற்படுத்தியது என்று கூறினார்.