கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள், தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று  மரியாதை செலுத்தியுள்ளார்.
மேலும், அங்கிருந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். இதேபோல், அண்ணா அறிவாலயம், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.