கொண்டாட்டத்துடன் ஐபிஎல் தொடரை முடிக்க ஏற்பாடு – பிசிசிஐ

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாட்டத்துடன் ஐபிஎல் நிறைவு விழா நடைபெறும் என பிசிசிஐ திட்டம்.

நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடர் பார்வையாளர்கள் அனுமதியுடன் கடந்த 26-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 25 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி மே 29-ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும், பிளே ஆஃப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் லக்னோவில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை கொண்டாட்டத்துடன் நிறைவு செய்ய பிசிசிஐ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை கொண்டாட்டத்துடன் முடிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்