தயவு செய்து கிழே இறங்குங்கள்.. தொண்டர்களிடம் கெஞ்சிய பிரதமர் மோடி.!

PM Modi : மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA)  முதல் அரசியல் பொதுக்கூட்டம் நேற்று ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, NDA கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More – SBI-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை… மீண்டும் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

ஆந்திர பிரதேசம் , பால்நாடு மாவட்டத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் மேடையில் பேசினார். அப்போது ஆளும் மாநில அரசை விமர்சித்தும், NDA கூட்டணி குறித்தும் பேசி வந்தார். அப்போது அவர் பேசுவதை கேட்க, தொண்டர்கள், பவன்கல்யாண் ரசிகர்கள் மேடைக்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த மின்விளக்கு கோபுரங்கள் மீது ஏறிவிட்டனர்.

Read More – அண்ணாச்சி கூட்டணி என்னாச்சி.? பாமகவை விட்டு பிடித்த அதிமுக.!

இதனை கண்ட பிரதமர் மோடி, மேடையில் இருந்து திடீரென எழுந்து, பேசிக்கொண்டு இருந்த பவன்கல்யாணை இடைநிறுத்தி, மைக்கை பிடித்த பிரதமர் மோடி, மின்விளக்கு கம்பத்தில் இருந்து அனைவரும் பத்திரமாக கீழே இறங்க வேண்டும் என்றும், இதுபோல யாரும் ஆபத்தான இடதில் மேலே ஏறக்கூடாது என்றும் கூறினார்.

பின்னர் பேச்சை தொடர்ந்த தெலுங்கான கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், மக்களின் உயிர் மீது அக்கறை கொண்டுள்ள பிரதமர் பேச்சை கேட்டு மின் கோபுரங்களில் இருந்து இறங்குங்கள் என்று கூறி, மீண்டும் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார் பவன் கல்யாண்.

Read More – மீண்டும் ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின்… வரலாற்று வெற்றி!

ஆந்திர பிரதேசத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 4ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் வரும் மே 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் தனித்தும், தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகள் அமைத்தும் போட்டியிடுகின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment