வாரத்தில் 6 நாட்களுக்கு மதுக்கடைக்கு அனுமதி.! வருடத்தில் 6 நாட்கள் விநாயகர் சிலை வைத்து வழிபட தடையா.? ஹெச். ராஜா

தமிழகத்தில் ஆண்டுக்கு 6 நாட்கள் இந்துக்கள் சமூக இடைவெளியுடன் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி மறுத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் – ஹெச் ராஜா.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளார்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் அரசு மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மதுக்கடைகளில் நாள்தோறும் எந்தவித சமூக இடைவெளியின்றி மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். இதற்கு அனுமதி வழங்கிய அரசு, தமிழகத்தில் ஆண்டுக்கு 6 நாட்கள் இந்துக்கள் சமூக இடைவெளியுடன் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி கொடுக்க மறுத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த முடிவை உடனடியாக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். அரசின் உத்தரவு மத சுதந்திரத்தில் தலையிடுகின்ற செயல். மத சடங்குகளில் தலையிடுவதற்கு அரசியல் சட்டப்படி அரசுத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், அறநிலைத் துறை அதிகாரிகளின் போக்கு அராஜக போக்காக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்