தீபாவளிக்கு வெளியாகும் AK-61.? தீவிர பணியில் படக்குழு.!

நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித்குமார் எச்.வினோத் இயக்கத்தில்  தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் அஜித் ஹீரோ,வில்லன் என மங்காத்தா பட பாணியில் நடித்து வருகிறாராம். அவருக்காக ஜோடியாக படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இதற்கிடையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தை தீபாவளிக்கு வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளர்களாம். விறு விறுவென்று படத்தின் படைப்பை முடிக்கும் நோக்கில் தீவிர பணியில் படக்குழுவினர் இறங்கியுள்ளார்களாம்.

வரும் மே 1-ஆம் தேதி அஜித் பிறந்த நாள் என்பதால், படத்திற்கான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளாராம். மேலும், படத்தில் அஜித் ஹீரோ,வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பரவும் தகவலால் படத்தின் மீது கூடுதலாக எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.