#BREAKING: 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு! – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என பரவும் தகவல் தவறானது என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அதன்படி, மே 6 முதல் மே 13-ஆம் தேதிக்குள் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி பாஸ் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும், அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்று வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்