7 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட அதிமுக.!

  • உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
  • இதை தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை 7 மாவட்டங்களுக்கு  அதிமுக வெளியிட்டு உள்ளது

தமிழகத்தில் வருகின்ற  27, 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள  தயாராகி வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர்.இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டு உள்ளது.அதில் அரியலூர் , தேனி, கிருஷ்ணகிரி,  சேலம், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு ஆகிய 7 மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்  பட்டியல் வெளியாகி யுள்ளதாக கூறியுள்ளது. ஆனால் பட்டியல் குறித்த விரிவான தகவல் அதில் இடம் பெறவில்லை. ஜெயலலிதா அவர்கள் அதிமுக பொதுச்செயலாளராக இருந்தபோது எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தான் முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும். இப்போதும் அதே  பாணியில் தான் அதிமுக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan