அதிமுக பொதுக்குழு – காவல்துறைக்கு உத்தரவு

அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி பெஞ்சமின் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தது உயர்நீதிமன்றம்.

அதிமுக பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் கேள்விகளுக்கு இன்று மதியம் ஒரு மணிக்குள் பதில் அளிக்கவும் நீதிபதி சதீஸ்குமார் உத்தரவிட்டார். அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ்-யிடம் 26 கேள்விகளை கேட்டிருந்தோம், ஆனால், பதில் வரவில்லை என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

பொதுக்குழு பாதுகாப்பு தொடர்பாக ஏதும் பிரச்னையெனில் ஓபிஎஸ் காவல்துறையை நாடலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி பெஞ்சமின் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தது உயர்நீதிமன்றம். அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வழக்கு தொடுத்திருந்தார். வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment