#BREAKING: உயரதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி – திரும்பப்பெற உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை திரும்பப்பெற உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற காவல்துறையினர், நீதிபதிகள் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை (காவலர்களை) திரும்பப்பெற வேண்டும் என கூறியுள்ளது. ஆர்டர்லிகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் ஓராண்டு பயிற்சி முடிந்து ரூ.45,000 ஊதியம் பெறுவோரை உயர் அதிகாரிகள் தனிப்பட்ட காரணத்துக்காக பயன்படுத்துவது குற்றம் எனவும் நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மேலும், நீதிபதி கூறுகையில், அரசியல்வாதிகளும் காவல்துறையும் கூட்டு சேர்ந்து செயல்படுவது அழிவுக்கு கொண்டு செல்லும். அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும், பரிசும் கொடுப்பது தவறு, குற்றங்கள் அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும். காவல்துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை அனுமதிப்பதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment