நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

சென்னை:ஓபிஎஸ்,இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கினைப்பளார் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்லாமல் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்,தலைமைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் செயற்குழு கூட்டம்,சசிகலா விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.மேலும்,டிசம்பர் மாதத்தில் செயற்குழு கூட்டத்தை நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.