பாக்.பிரதமர் இம்ரான்கான் தலைமையில் ஆலோசனை…!!

  • புல்மாவா தாக்குத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது.
  • இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் தலைமையில் இந்த தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த முகாம்கள் இந்தியாவின் தாக்குதலில் தரை மட்டமாக்கப்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகின்றது.ஆனால் இந்தியா தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றது.மேலும் தற்போது மத்திய அரசு இந்தியா பயங்கரவாதிகள் முகாம் மீது சக்திவாய்ந்த 6 குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் தலைமையில்  இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது குறித்து பாகிஸ்தான் அவசர ஆலோசனை நடத்தியுள்ளது. பாக்கிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, உயர் அதிகாரிகள் கலந்து பலர் கொண்டனர். இந்தியாவின் தாக்குதலை எதிர்பார்த்த ஒன்று என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான், இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment